ADDED : செப் 04, 2025 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பண்டிகை காலம் துவங்கியுள்ளதை முன்னிட்டு, நம் நாட்டின் பாமாயில் இறக்குமதி கடந்த 13 மாதங்களில் இல்லாத வகையில், 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தோனேசியா மற்றும் மலேசியாவிடம் இருந்து நம் நாடு அதிக அளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா 9,93,000 மெட்ரிக் டன் பாமாயிலை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 13 மாதங்களின் அதிகபட்ச அளவாகும்.
அதே நேரத்தில் சோயா எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 28 சதவீதம் குறைந்து 3,55,000 டன்னாக உள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் மிகக்குறைந்த அளவு. சோயா எண்ணெயைவிட குறைந்த விலைக்கு பாமாயில் கிடைப்பதால், இதன் இறக்குமதி அதிகரித்துள்ளது.