கனடாவிடம் ரூ.25,000 கோடிக்கு யுரேனியம் வாங்குகிறது இந்தியா
கனடாவிடம் ரூ.25,000 கோடிக்கு யுரேனியம் வாங்குகிறது இந்தியா
ADDED : நவ 26, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனடாவிலிருந்து 25,000 கோடி ரூபாய்க்கு யுரேனியத்தை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இத்தகவலை கனடாவைச் சேர்ந்த தி குளோப் அண்டு மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இதன்படி கனடாவை சேர்ந்த கமிக்கோ, பத்து ஆண்டுகள் இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்யும். இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிகிறது. ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய-ா - கனடா வர்த்தக பேச்சு தற்போது தொடங்கியுள்ளது. யுரேனியம் வழங்குவது தொடர்பாகப் பேச்சு நடப்பதை வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

