அன்னிய நேரடி முதலீடுகளுக்கு இந்தியா விருப்ப இடமாக உள்ளது
அன்னிய நேரடி முதலீடுகளுக்கு இந்தியா விருப்ப இடமாக உள்ளது
ADDED : பிப் 10, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:உலகளவில் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ள போதிலும், அன்னிய நேரடி முதலீடுகளுக்கான விருப்பமான இடமாக இந்தியா தொடர்வதாக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
அமெரிக்கா உட்பட உலக நாடுகள் முழுவதும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், வளர்ந்த நாடுகளை நோக்கி மீண்டும் மூலதனம் திரும்பிச் செல்லத் துவங்கிஉள்ளன.
இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு உள்ள வலுவான தேவை மற்றும் இங்கு முதலீடு செய்வதில் உள்ள நன்மைகளை கண்ட முதலீட்டாளர்களால், நாம் பிற நாடுகளை போல் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கவில்லை.
இருப்பினும், பல குறிப்பிடத்தக்க அன்னிய முதலீடுகள் நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.