ADDED : செப் 25, 2025 01:59 AM

புதுடில்லி:ஆசியாவின் முன்னணி டிஜிட்டல் தொழில்நுட்ப கண்காட்சியாக, 9வது இந்திய மொபைல் காங்கிரஸ் கண்காட்சி, டில்லியில் வரும் அக்., 8 முதல் 11ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
கண்காட்சியில், 2வது சர்வதேச பாரத் 6ஜி கருத்தரங்கு, பாரத் 6ஜி கூட்டணி சார்பில் 9, 10ம் தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யசோபூமி கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் கண்காட்சியை இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கமும் மத்திய தொலைத்தொடர்பு துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
கண்காட்சியில், இந்திய டிஜிட்டல் துறையின் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
கண்காட்சியில் 150 நாடுகளைச் சேர்ந்த 1.50 லட்சம் பார்வையாளர்கள், 400 அரசு அமைப்பாளர்கள், 30 அமைச்சகங்கள், 7,000 பிரதிநிதிகள், 800 பேச்சாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.