ADDED : ஏப் 11, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:இந்தியா - நேபாளம் இடையே, வேளாண் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டுவில் மூன்றாவது 'பிம்ஸ்டெக்' நாடுகள் கூட்டமைப்பின் வேளாண் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் நேபாள நாட்டின் வேளாண் அமைச்சர் ராம்நாத் அதிகாரி ஆகியோர், இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான விவசாயத்துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரு நாடுகளுக்குஇடையேயான பயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டது.

