sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 'ஒலிம்பிக் வீரர்களுக்கான உடைகள் தயாரிக்க இந்தியா முன்வரவேண்டும்'

/

 'ஒலிம்பிக் வீரர்களுக்கான உடைகள் தயாரிக்க இந்தியா முன்வரவேண்டும்'

 'ஒலிம்பிக் வீரர்களுக்கான உடைகள் தயாரிக்க இந்தியா முன்வரவேண்டும்'

 'ஒலிம்பிக் வீரர்களுக்கான உடைகள் தயாரிக்க இந்தியா முன்வரவேண்டும்'


ADDED : பிப் 27, 2026 02:01 AM

Google News

ADDED : பிப் 27, 2026 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ''எதிர்காலத்தில் காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில், வீரர்கள் அணியும் விளையாட்டு ஆடைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்'' என்று, தேசிய தொழில்நுட்ப ஜவுளி திட்ட இயக்குநர் அசோக் மல்ேஹாத்ரா பேசினார்.

திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரியில், 'பேஷ்கான் 2கே26' தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் பேஷன் ஷோ துவக்க விழா நேற்று நடந்தது.

கருத்தரங்கை துவக்கிவைத்த, மத்திய ஜவுளித்துறையின் தேசிய தொழில்நுட்ப ஜவுளி திட்ட இயக்குநர் அசோக் மல்ேஹாத்ரா பேசியதாவது:

வர்த்தகத்தை உயர்த்துவதற்கு சாதாரண பருத்தி இழை ஆடை தயாரிப்பு மட்டும் போதாது. மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்பில் கால்பதிக்கவேண்டும்.

விளையாட்டு ஆடைகள், தீ தடுப்பு, ரசாயன தொழிற்சாலைகளில் அணியப்படும் ஆடை முதலான சிறப்புவகை ஆடைகள் தயாரித்து, உலகளாவிய நாடுகளின் சந்தைக்கு ஏற்றுமதி செய்யவேண்டும்.

விளையாட்டு ஆடைகளை பொறுத்தவரை, சாதாரணமாக இல்லாமல், வீரர்களின் உடல் நிலைக்கு ஏற்றவகையிலான தனித்துவமான ஆடைகள் தயாரிக்கவேண்டும்.

எதிர்காலத்தில் காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில், மற்ற உபகரணங்கள் எந்த நாட்டு தயாரிப்பாக இருந்தாலும் பரவாயில்லை; வீரர்கள் அணியும் விளையாட்டு ஆடைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

'தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையம் வேண்டும்'
திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம், கல்லுாரி தலைவர் கோவிந்தராஜ், அடல் இன்குபேஷன் மைய தலைவர் செந்தில்குமார் ஆகியோர், திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்கள் அடங்கிய மனுவை, திட்ட இயக்குநரிடம் வழங்கினர். 'திருப்பூர் பின்னலாடை உற்பத்தியின் அனைத்து பிரிவுகளிலும், திறன் மிக்க தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஜவுளி அமைச்சகம் வாயிலாக, திறன் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். திருப்பூரில் தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையம் அமைக்கவேண்டும்' என, திட்ட இயக்குநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us