ADDED : அக் 08, 2025 01:15 AM

சென்னை, அக். 8-
'இந்தியா - சுவிட்சர்லாந்து இடையிலான வணிகம், 2024ல் 86,000 கோடி ரூபாயை எட்டியது' என, சுவிட்சர்லாந்து துாதர் மாயா திசாபி தெரிவித்தார்.
சென்னையில் , தென்மாநில தொழில் , வர்த்தக கூட்டமைப்பு சார்பில் நேற்று நடந்த தமிழகம் - ஐரோப்பிய நாடுகளின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மாநாட்டில், அவர் பேசியதாவது:
கடந்த, 2024ல் இந்தியா, சுவிட்சர்லாந்து இடையில் தங்கம் தவிர்த்து, மற்ற பொருட்களின் வணிகம், 86,000 கோடி ரூபாயை எட்டியது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான வணிகம், அடுத்த, 15 ஆண்டுகளில், 8.60 லட்சம் கோடி ரூபாயை எட்டும்.
இதன் வாயிலாக, 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சுவிட்சர்லாந்தை சேர்ந்த, 330 நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துவங்கியுள்ளன. இதில், 17 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.