உலகளவில் 'கன்டெய்னர்' வணிகத்தில் முதல்முறையாக இறங்கும் இந்தியா
உலகளவில் 'கன்டெய்னர்' வணிகத்தில் முதல்முறையாக இறங்கும் இந்தியா
ADDED : நவ 20, 2024 12:17 AM

புதுடில்லி:உலக அளவில் 'கன்டெய்னர்' போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட, முதல்முறையாக இந்தியா திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.
இந்திய ரயில்வேயின் கன்டெய்னர் போக்குவரத்து நிறுவனமான 'கான்கோர்', உலக அளவில் கன்டெய்னர் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வை மேற்கொண்டு, அறிக்கை அளிக்க, 'யர்னஸ்ட் அண்டு யங், கே.பி.எம்.ஜி., பிரைஸ்வாட்டர்கூப்பர்' ஆகிய நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில் மிகப்பெரும் வணிகத் துறைகளில் ஒன்றாக உள்ள கன்டெய்னர் வணிகத்தில், முதல் கட்டமாக தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா கவனம் செலுத்த உள்ளது.
கன்டெய்னர் போக்குவரத்து வணிகத்துக்கான சிறந்த வரைபட பாதைகள், அதிக வாய்ப்புள்ள சந்தைகளை ஆராய்ந்த பின், கான்கோர் நிறுவனம் இதில் இறங்கும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

