ADDED : ஜூலை 10, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த கோடீஸ்வரர்களுக்கான பட்டியலில், தைவான் மற்றும் இஸ்ரேலை பின்னுக்கு தள்ளி, 12 கோடீஸ்வரர்களுடன், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக, 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பிறந்து, அமெரிக்காவில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களாக இருப்போர் எண்ணிக்கை 125 என பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், 43 நாடுகளை சேர்ந்தவர்கள்.
இவர்களில் 12 பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். சுந்தர் பிச்சை மற்றும் சத்ய நாதெள்ளா ஆகியோரும் இதில் இடம் பிடித்துள்ளனர். தைவான் மற்றும் இஸ்ரேல் நாடுகள், தலா 11 பேருடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.