ADDED : ஜூலை 30, 2025 05:55 AM

மும்பை:
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு, நுகர்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிராக்டர் அண்டு கேம்பிள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சைலேஷ் ஜெஜூரிகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வரும் 2026, ஜன.,1ல் பதவியேற்க உள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பிராண்டுகள் பெயரில், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட நுகர்பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில்  பிராக்டர் அண்டு கேம்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 1989ல் இந்நிறுவனத்தில் துணை பிராண்டு மேலாளராக பணியில் சேர்ந்த சைலேஷ், படிப்படியாக முன்னேறி பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார்.
கடந்த 2021ல் இருந்து இந்நிறுவனத்தின் சி.ஓ.ஓ.,வாக பணியாற்றி வரும் சைலேஷ் ஜெஜூரிகர், மும்பை பல்கலை.,யில் பி.ஏ.,பொருளாதாரம், ஐ.ஐ.எம்.,லக்னோவில் எம்.பி.ஏ., படித்தவர் ஆவார்.

