இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு; காரணத்தை ஆராய்கிறது நிதியமைச்சகம்
இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு; காரணத்தை ஆராய்கிறது நிதியமைச்சகம்
ADDED : மே 29, 2025 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : கடந்த நிதியாண்டில், நம் நாட்டு நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு 75 சதவீதம் அதிகரித்து, 2.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டின் நிகர மதிப்பு 96 சதவீதம் சரிந்து, 3,400 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சகம், 'உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவிய போதிலும், கடந்த நிதியாண்டில் இந்திய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
'நிறுவனங்கள், உள்நாட்டில் முதலீடு மேற்கொள்ள தயக்கம் காட்டிய நிலையில், வெளிநாடுகளில் அதிக முதலீடு மேற்கொண்டுள்ளன' என தெரிவித்துள்ளது.