துருக்கி, அஜர்பைஜான் உடன் இந்தியாவின் வர்த்தக நிலவரம்
துருக்கி, அஜர்பைஜான் உடன் இந்தியாவின் வர்த்தக நிலவரம்
ADDED : மே 11, 2025 12:10 AM

புதுடில்லி:பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா முன்பதிவுகளை இந்தியர்களும், சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்களும் ரத்து செய்து வருகின்றனர். சுற்றுலா மட்டுமின்றி; இந்த இரண்டு நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகமும் கணிசமானது.
இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக சராசரி
துருக்கி: 1 லட்சம் கோடி ரூபாய்
அஜர்பைஜான்: 15,500 கோடி ரூபாய்
துருக்கியுடனான இந்தியாவின் வர்த்தகம்
நிதியாண்டு மொத்த வர்த்தகம் ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசம் (கோடி ரூபாய்)
2020-21 60,180 43,265 17,935 +2.98
2021-22 91,035 61,710 16,745 +5.29
2022-23 1,17,300 81,600 35,700 +5.40
2023-24 88,655 56,525 32,130 +2.87
ஏற்றுமதியாகும் பொருட்கள்
*பொறியியல் கருவிகள்
*பெட்ரோலிய பொருட்கள்
*மின்னணு பொருட்கள்
*ரசாயனங்கள்
*ஆடைகள், ஜவுளி
*மின்சார கருவிகள்
*வாகனங்கள்
*பாய்லர்கள்
இறக்குமதி பொருட்கள்
*கச்சா எண்ணெய்
*இயந்திரங்கள்
*தங்கம்
*மார்பிள்
*கட்டுமான பொருட்கள்
*ரசாயனங்கள்
*எண்ணெய் வித்துகள்
*ஆப்பிள்
*ஆபரணக் கற்கள்
அஜர்பைஜானுடனான இந்திய வர்த்தகம்
நிதியாண்டு மொத்த வர்த்தகம் ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசம் (கோடி ரூபாய்)
2020 7,850 1,550 6,300 -4,750
2021 6,280 1,210 5,070 -3,860
2022 16,000 1,870 14,130 -12,260
2023 12,200 1,710 10,490 -8,780
2024 7,060 780 6,300 -5,520
ஏற்றுமதியாகும் பொருட்கள்
*அரிசி
*ஸ்மார்ட்போன்
*மருந்து பொருட்கள்
*அலுமினியம்
*செராமிக் டைல்ஸ்
*கிரானைட்
*பிளாக் டீ
*மருந்துகள்
*இறைச்சி
இறக்குமதியாகும் பொருட்கள்
*கச்சா எண்ணெய்
*யூரியா
*ஐயோடின்
*கச்சா பட்டு
*கால்நடை தோல்
(இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் அஜர்பைஜான் மூன்றாம் இடம்)
கடந்த ஓரிரு ஆண்டுகளில் துருக்கி, அஜர்பைஜானுடன் இந்திய ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்தது. இந்நிலையில், இருநாடுகளுடன் வர்த்தக உறவு பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.