தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 2.90 சதவீதமாக குறைந்தது
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 2.90 சதவீதமாக குறைந்தது
ADDED : ஏப் 12, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த பிப்ரவரியில் 2.90 சதவீதமாக குறைந்துள்ளது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தயாரிப்பு துறை, சுரங்கம் மற்றும் மின்சாரத்துறை சார்ந்த உற்பத்தி சரிந்ததே இதற்கு காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 5.20 சதவீதமாகவும், 2024 பிப்ரவரியில் தொழில் துறை உற்பத்தி குறியீடு 5.60 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
ஒட்டுமொத்தமாக, கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாதங்களில், சராசரி தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4.10 சதவீதமாக உள்ளது. இது, 2023 -- 24 நிதியாண்டின் இதே காலத்தில் 6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.