ADDED : நவ 12, 2024 08:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : ஹெல்த்கேர் துறையினருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீர்வளிக்கும் நிறுவனமான இன்பின்எக்ஸ், மதுரையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மையத்தை அமைத்துள்ளது.
மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு அடுத்ததாக, மதுரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
ஹெல்த்கேர் நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் வருவாய் மேலாண்மை நடைமுறையை மேம்படுத்த, இந்நிறுவனம் உதவும்.
இதன் வாடிக்கையாளராகும் நிறுவனங்களின் வருவாய் மேம்பாட்டை நோக்கமாக கொண்டு, தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கும்.

