ரூ.50 கோடிக்கு வீடு வாங்கிய 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி
ரூ.50 கோடிக்கு வீடு வாங்கிய 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி
ADDED : டிச 08, 2024 12:56 AM

பெங்களூரு:பெங்களூரு 'கிங்பிஷ்சர் டவர்ஸ்' அடுக்குமாடி குடியிருப்பில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீட்டை 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயணமூர்த்தி வாங்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவந்துள்ளதாவது:
பெங்களூரு நகரின் மத்தியில் முக்கிய வணிக நிறுவனங்கள் உள்ள யு.பி., சிட்டி குடியிருப்பு பகுதியில் உள்ளது கிங்பிஷர் டவர்ஸ். இது, 4.5 ஏக்கரில் மூன்று கட்டடங்களில் 34 மாடிகளைக் கொண்டதாகும்.இது 8,000 சதுர அடியில் துவங்கி, 4 படுக்கை யறை கொண்ட 81 வீடுகளைக் கொண்ட வளாகமாகும். இங்கு ஒரு சதுர அடி விலை 59,500 ரூபாய்.இந்த வளாகத்தில் உள்ள 16வது மாடியில் உள்ள 8,400 சதுர அடி கொண்ட நான்கு படுக்கையறைகளுடன் கூடிய வீட்டை, 50 கோடி ரூபாய்க்கு 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயணமூர்த்தி வாங்கியுள்ளார்.
இதே வளாகத்தில் அவர் வாங்கியுள்ள இரண்டாவது சொகுசு வீடு இது. ஐந்து பிரத்யேக கார் பார்க்கிங் வசதிகளுடன் கூடிய வீட்டை, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து நாராயணமூர்த்தி வாங்கிஉள்ளார்.ஏற்கனவே, 4 ஆண்டு களுக்கு முன், நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, இதே வளாகத்தின் 23வது மாடியில் 29 கோடி ரூபாய்க்கு
ஒரு குடியிருப்பை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பின் காலாண்டு பராமரிப்பு கட்டணமாகஒவ்வொரு குடியிருப்பாளரும் 5 லட்சம் ரூபாய்செலுத்துகின்றனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.