வேலுார் வி.ஐ.டி., வளாகத்தில் கண்டுபிடிப்பு மையம்
வேலுார் வி.ஐ.டி., வளாகத்தில் கண்டுபிடிப்பு மையம்
ADDED : நவ 25, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரான்ஸை சேர்ந்த டிஜிட்டல் ஆட்டோமேஷன் நிறுவனமான 'ஷ்னைடர் எலக்ட்ரிக்', வி.ஐ.டி., கல்வி நிறுவனத்துடன் சேர்ந்து அதன் வேலுார் கல்வி வளாகத்தில் புதிய கண்டுபிடிப்பு மையத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த மையம், நாட்டின் டிஜிட்டல் மற்றும் நிலையான எதிர்காலத்துக்கு தேவையான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்த மையத்தில் 1,100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

