டிஜிட்டல் கரன்சி மேம்பாட்டில் தீவிரம்: நிர்மலா சீதாராமன்
டிஜிட்டல் கரன்சி மேம்பாட்டில் தீவிரம்: நிர்மலா சீதாராமன்
ADDED : ஜன 26, 2024 02:29 AM

புதுடில்லி: டிஜிட்டல் கரன்சியை மேம்படுத்துவதில், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய பேமண்டுகளுக்கு டிஜிட்டல் கரன்சி உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் மொத்த விற்பனைப் பிரிவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்பது வங்கிகளையும் ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுத்தது.
மேலும் அதே ஆண்டின் டிசம்பர் மாதம், சில்லறை விற்பனை பிரிவிலும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது , எல்லை தாண்டிய பேமண்டுகளுக்கு டிஜிட்டல் கரன்சி உதவும் என்று உறுதியாக நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் கரன்சி குறைந்த செலவில் பணம் செலுத்துவதை விரைவுபடுத்த உதவுவதாகவும், பணம் அனுப்பும் மற்றும் பெறும் செலவைக் குறைப்பதாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக டிஜிட்டல் கரன்சியை மேம்படுத்துவதில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

