sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

16 ஆயிரம் பணியாளர்கள் பணி நீக்கம்: அமேசான் அறிவிப்பு

/

16 ஆயிரம் பணியாளர்கள் பணி நீக்கம்: அமேசான் அறிவிப்பு

16 ஆயிரம் பணியாளர்கள் பணி நீக்கம்: அமேசான் அறிவிப்பு

16 ஆயிரம் பணியாளர்கள் பணி நீக்கம்: அமேசான் அறிவிப்பு

1


UPDATED : ஜன 28, 2026 09:26 PM

ADDED : ஜன 28, 2026 08:27 PM

Google News

UPDATED : ஜன 28, 2026 09:26 PM ADDED : ஜன 28, 2026 08:27 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமேசான் நிறுவனம் 16,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

மின்னணு வர்த்தக நிறுவனமான 'அமேசான்' கடந்த 2025 ஆம் ஆண்டின் இறுதியில் 14,000 பணியிடங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு புதிய கட்டப் பணிநீக்கத்தைத் தொடங்கியுள்ளது. இம்முறை 16,000 பணியாளர்களை அந்நிறுவனம் நீக்குகிறது.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அமேசான் சுமார் 30,000 பணியாளர்களை நீக்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தைத் தொடர்ந்து, வெறும் மூன்று மாத இடைவெளியில் நடக்கும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும்.இது நிறுவனத்தின் மொத்த கார்ப்பரேட் ஊழியர்களில் 10 சதவீதமாகும்.

இது குறித்து அமேசான் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பெத் கலெட்டி, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு(ஏஐ) அதிக முக்கியத்துவம் அளிக்கவும், கொரோனா காலத்தின்போது செய்யப்பட்ட அதிகப்படியான நியமனங்களைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமேசான் வெப் சர்வீசஸ் , ரீடெய்ல், பிரைம் வீடியோ மற்றும் மனிதவள துறைகளில் இந்தப் பணிநீக்கம் இருக்கும்.

இவ்வாறு பெத் கலெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us