தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சரிய வைத்த சர்வதேச நிலவரங்கள்

சரிய வைத்த சர்வதேச நிலவரங்கள்

சரிய வைத்த சர்வதேச நிலவரங்கள்


ADDED : நவ 28, 2024 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2024 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் தலா 1.50 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது

• நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. ஆனால், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்பின் பொருளாதார கொள்கையால், பெடரல் ரிசர்வ், வட்டியை குறைப்பதற்கான வாய்ப்பு குறைவு எனும் செய்தி, ரஷ்யா -- உக்ரைன் இடையேயான போர் குறித்த கவலை ஆகியவற்றால் முதலீட்டாளர்கள், இன்போசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களின் பங்குகளை அதிகளவில் விற்க துவங்கினர். இதனால், பிற்பகல் வர்த்தகத்தின் போது சந்தை, கடும் சரிவை சந்தித்தது

• நிப்டி குறியீட்டில் பொதுத்துறை வங்கிகள், ஊடகம் மற்றும் ரியல் எஸ்டேட் தவிர்த்து, அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த பங்குகளை கொண்ட குறியீடு, 2.39 சதவீதமும்; வாகனத்துறை பங்குகள் குறியீடு 1.63 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன

• மேலும், எப் அண்டு ஓ., பிரிவில், வாராந்திர ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததும், சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று--- ---11,756 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.49 சதவீதம் அதிகரித்து, 73.18 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா சரிந்து, இதுவரை இல்லாத வகையில் 84.47 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 அதானி என்டர்பிரைசஸ்

 எஸ்.பி.ஐ.,

 ஸ்ரீராம் பைனான்ஸ்

 சிப்லா

அதிக இறக்கம் கண்டவை

 எஸ்.பி.ஐ.,லைப்

 எச்.டி.எப்.சி.,லைப்

 மஹிந்திரா & மஹிந்திரா

 இன்போசிஸ்

 அதானி போர்ட்ஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us