சீனாவின் சோலார் பேனல்கள் இறக்குமதி குறித்து விசாரணை
சீனாவின் சோலார் பேனல்கள் இறக்குமதி குறித்து விசாரணை
ADDED : பிப் 17, 2024 12:48 AM

புதுடில்லி:சீனா, வியட்நாமில் இருந்து அதிகளவில் 'சோலார் பேனல்கள்' இறக்குமதி செய்யப்படுவதையடுத்து, 'பொருள் குவிப்பு தடுப்பு' விசாரணையை வர்த்தக அமைச்சகத்தின் டி.ஜி.டி.ஆர்., பிரிவு துவக்கியுள்ளது.
சீனா மற்றும் வியட்நாம் நாடுகளில் இருந்து சோலார் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பேனல்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால், உள்நாட்டு வணிகம் பாதிக்கப்படுவதாக தொழில்துறையினர் தெரிவித்த புகாரையடுத்து, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டி.ஜி.டி.ஆர்., எனப்படும் வர்த்தக தீர்வுகள் தலைமை இயக்குனரகம் விசாரணை நடத்த துவங்கியுள்ளது.
இந்த புகாரில் உண்மைத் தன்மையும், அதற்கான சான்றுகளும் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்த டி.ஜி.டி.ஆர்., துவங்கியுள்ளது.
விசாரணையில் இவ்விரு நாடுகளின் பொருள் குவிப்பால் உள்நாட்டு தொழில்துறை பாதிக்கப்படுவது உறுதியானால், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, 'பொருள் குவிப்பு தடுப்பு வரி' விதிக்க இயக்குனரகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். இறுதி முடிவை மத்திய நிதியமைச்சகம் எடுக்கும்.