ADDED : மே 15, 2025 01:36 AM

புதுடில்லி:நான்கு இந்திய நிறுவனங்கள், கடந்த மாதம் துருக்கி மற்றும் அஜர்பைஜானில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்துாரை எதிர்த்து, பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக இரு நாடுகளும் தெரிவித்திருந்த நிலையில், இந்நாடுகளை புறக்கணிப்பதற்கான குரல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்துக்கான இந்திய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், நம் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்நாடுகளில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நிறுவனங்கள் துருக்கியிலும்; ஒரு நிறுவனம் அஜர்பைஜானிலும் முதலீடு செய்துள்ளன. அதிகபட்சமாக 'பிராஜக்ட் அஸ்லான்' என்ற நிறுவனம் அஜர்பைஜான் விவசாயம் மற்றும் சுரங்கத் துறையில் 47 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்திய நிறுவனங்கள் கடந்த மாதம் கிட்டத்தட்ட 58,000 கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 90 சதவீதம் அதிகமாகும்.