உள்ளடக்கத்திற்கு செல்ல

முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் சட்டசபையில் மசோதா தாக்கல்
முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் சட்டசபையில் மசோதா தாக்கல்
ADDED : செப் 03, 2026 06:39 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை, சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தாக்கல் செய்தார்.
அமைச்சர் தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் தொழில் தொடங்க, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், சீரமைக்கப்பட்ட, வெளிப்படையான முறையில் அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தை முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக நிலைநிறுத்த முடியும்.
இதற்காக நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தவும், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 2018 தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டத்தில் திருத்தம் செய்ய இந்த மசோதா வழிவகுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
