ADDED : அக் 05, 2024 01:06 AM

புதுடில்லி,:இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்' போன்கள் ஏற்றுமதி செய்யப்படும் என, 'ஆப்பிள்' நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மேக்ஸ் ரக போன்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த வரிசை கொண்ட போன்கள் இந்தியாவிலும் தயாரிக்கப்படுகின்றன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 16 ரக போன்கள், விரைவில் நாடு முழுதும் கிடைக்கும் எனவும்; உலகெங்கிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நான்கு சில்லரை விற்பனை ஸ்டோர்களை இந்தியாவில் திறக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஸ்டோர்களை பெங்களூரு, புனே, டில்லி என்.சி.ஆர்., மற்றும் மும்பையில் திறக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.