கட்டண உயர்வு அறிவிப்பு ஐ.ஆர்.சி.டி.சி., பங்கு 2% உயர்வு
கட்டண உயர்வு அறிவிப்பு ஐ.ஆர்.சி.டி.சி., பங்கு 2% உயர்வு
ADDED : ஜூன் 26, 2025 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் பங்குகள் விலை, நேற்றைய வர்த்தகத்தில் இரண்டு சதவீத உயர்வு கண்டது. கொரோனா காலத்துக்குப் பின், முதல்முறையாக, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல், பயணியர் கட்டணத்தை ரயில்வே அதிகரிக்க உள்ளது.
கட்டண உயர்வு தகவலால், ஐ.ஆர்.சி.டி.சி., பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டன. 500 கி.மீ., வரையிலான பயணத்துக்கும், சீசன் டிக்கெட் பயணத்திற்கும் கட்டண உயர்வில்லை. 500 கி.மீ.,க்கு மேல் பயணத்துக்கு, ஒரு கிலோ மீட்டருக்கு 1 காசும், ஏசி வகுப்புகளில் 2 காசும் உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.