sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

இ.டி.எப்., வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்றதா?

/

இ.டி.எப்., வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்றதா?

இ.டி.எப்., வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்றதா?

இ.டி.எப்., வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்றதா?


ADDED : மார் 30, 2025 08:53 PM

Google News

ADDED : மார் 30, 2025 08:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகை வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வதை விட, இ.டி.எப்., வடிவில் முதலீடு

செய்வது ஏற்றதா? என பார்க்க வேண்டும்.

தங்கத்தின் விலை போக்கு காரணமாக முதலீடு நோக்கில் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கிறது. அதிகரிக்கும் விலையை மீறி, இந்தியாவின் தங்க நுகர்வு மேலும் அதிகரித்து வருகிறது. கலாச்சார நோக்கிலான காரணங்கள் தவிர, இந்திய குடும்பங்களை பொறுத்தவரை தங்கம் பொருளாதார நெருக்கடி காலங்களில், பாதுகாப்பை அளிப்பதாக கருதப்படுகிறது.

பொதுவாக, சர்வதேச பொருளாதார தேக்க நிலை நெருக்கடிகளை இந்திய குடும்பங்கள் திறம்பட எதிர்கொள்ள தங்கம் ஒரு காரணமாகவும் அமைகிறது. உலக தங்க கவுன்சிலின் தகவல்படி, இந்திய இல்லங்களில், 220 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

எதிர்கால போக்கு


சர்வதேச பொருளாதார சூழல், புவிசார் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தங்கம் தொடர்ந்து ஏறுமுகம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை போக்கை அடிப்படையாக கொண்டு, முதலீடு நோக்கில் எத்தகைய உத்தி பின்பற்றப்பட வேண்டும் எனும் கேள்வியும் எழுகிறது.

தங்கம் விரிவாக்கத்திற்கு உதவுவதால், முதலீடு தொகுப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை இருக்கலாம் என்று வலியுறுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தங்கத்தின் முதலீடு 38 சதவீதம் உயர்ந்திருக்கிறது எனும் அம்சமும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

முதலீடு நோக்கில் தங்கத்தை அணுகும் போது, நகைகளை விட, காகித வடிவில் முதலீடு செய்வது ஏற்றது என கருதப்படுகிறது. அந்த வகையில் தங்க சேமிப்பு பத்திரங்கள், தங்க நிதிகள் மற்றும் டிஜிட்டல் கோல்டு ஆகியவை மாற்று வாய்ப்புகளாக அமைகின்றன.

ஏற்ற வாய்ப்பு


தங்க சேமிப்பு பத்திர புதிய வெளியீடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தங்க இ.டி.எப்., நல்ல வாய்ப்பாக அமைவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். மியூச்சுவல் பண்ட் வகைகளில் ஒன்றான தங்க இ,.டி.எப்.,கள், தங்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றன.

தங்கத்தின் விலை போக்கிற்கு ஏற்ப அமையும் இந்த நிதிகளை சந்தையில் பரிவர்த்தனை செய்யலாம். பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி நெறிமுறைகளின் படி, தங்க நிதிகள், லண்டன் சந்தை தர நிர்ணயப்படி தங்கம் வாங்கி வைத்திருக்க வேண்டும்.

நகைகளில் உள்ளது போல, செய்கூலி, சேதாரம் போன்றவை இல்லை என்பதும், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் தங்க நிதிகளின் சாதகமான அம்சங்களாகும். மேலும் இவற்றை டிமெட் கணக்கு மூலம் சந்தையில் பரிவர்த்தனை செய்யலாம். தேவை எனில் எளிதாக பணமாக்கி கொள்ளலாம். செலவு நோக்கிலும் செயல் திறன் மிக்க வழியாக அமைவதாக கருதப்படுகிறது.

தங்க நகை போல அல்லாமல் சிறிய அளவிலும் நிதிகளின் யூனிட்களை வாங்கலாம். எனவே முதலீடு தொகுப்பின் தன்மை மற்றும் நிதி இலக்குகளுக்கு ஏற்ப சிறிய அளவில் முதலீட்டை படிப்படியாக மேற்கொள்ளலாம். நிதிகளில் முதலீடு செய்யும் நிதிகள், எஸ்.ஐ.பி., எனும் சீரான முறையில் முதலீடு செய்யும் வாய்ப்பையும் அளிக்கின்றன.

விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கமான போக்கை சமாளிக்கவும் எஸ்.ஐ.பி., முறை கைகொடுக்கிறது. தங்க முதலீட்டை மேற்கொள்ளும் போது முதலீட்டாளர்கள் இந்த அம்சங்களை பரிசீலித்து செயல்படுவது பொருத்தமாக இருக்கும்.






      Dinamalar
      Follow us