குளுகுளு குன்னுாரில் ஐ.டி., பார்க் முதல் முறையாக தனியாருக்கு அழைப்பு
குளுகுளு குன்னுாரில் ஐ.டி., பார்க் முதல் முறையாக தனியாருக்கு அழைப்பு
ADDED : ஆக 14, 2025 10:47 PM

சென்னை:நீலகிரி மாவட்டம், குன்னுாரில், முதல் முறையாக தனியார் நிறுவனம் வாயிலாக தகவல் தொழில்நுட்ப பூங்காவை, தமிழக அரசு அமைக்க உள்ளது. இதற்கு, நிறுவனத்தை தேர்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனத்துக்கு, சென்னை தரமணி, கோவை, திருவள்ளூர் பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடங்கள் உள்ளன. விழுப்புரம், சேலம், தஞ்சை, துாத்துக்குடி, திருப்பூரில், 'மினி டைடல்' கட்டடங்கள் அமைந்துள்ளன.
இவற்றின் கட்டுமான பணிகளை, 'டெண்டர்' கோரி, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக டைடல் பார்க் நிறுவனம் மேற்கொண்டது. கட்டடத்தில் உள்ள அலுவலக இடங்களை டைடல் பார்க் நிறுவனமே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு, வருவாய் ஈட்டி வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அருகில் குன்னுாரில் உள்ள எடப்பள்ளி என்ற இடத்தில், முதல் முறையாக தனியார் நிறுவனம் வாயிலாக, தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க டைடல் பார்க் முடிவு செய்துள்ளது.
டைடல் பூங்கா அமைக்க, 8 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்கப்படும் தனியார் நிறுவனம் சொந்த செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பூங்காவை அமைக்கும் நிறுவனம், 45 ஆண்டுகளுக்கு அதை இயக்க வேண்டும் அனுமதி காலம் முடிந்ததும், டைடல் பார்க்கிடம் ஒப்படைக்க வேண்டும்