தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/உங்கள் குரல்(Tag)

உங்கள் குரல்(Tag)

உங்கள் குரல்(Tag)


UPDATED : நவ 19, 2026 04:10 PM

ADDED : நவ 19, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 04:10 PM ADDED : நவ 19, 2026 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வெல்டிங் தொழிலை பாதுகாக்க வேண்டும்



நாமக்கல் | தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்

பிரச்னை: இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம் இரு மடங்கு அதிகரிப்பு ஆகியவற்றால், கேட், கிரில், ஷட்டர் தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை: தொழில் சங்க பிரதிநிதிகளை அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும். மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதுடன், சிறு நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் நடத்த தேவையான சலுகைகளையும் வழங்க வேண்டும்.

மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க வேண்டும்



அரியலுார் | தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

பிரச்னை: தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அருகில் வசிப்போர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில், நிறுவனங்களின் குறைகளை சரிசெய்ய போதிய வாய்ப்பளிக்காமல் அவை மூடப்படுவதாக பேரமைப்பு தெரிவித்துள்ளது.

கோரிக்கை: மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி, குறைகளை சுட்டிக்காட்டி சரிசெய்ய அவகாசம் அளிக்க வேண்டும். சிறு வணிகர்களுக்கு ஆயுட்கால உரிமம் வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us