ADDED : ஏப் 18, 2025 10:58 PM

புதுடில்லி, ஏப். 19-
இந்தியாவின் மென்பொருள் மற்றும் ஐ.டி., சேவைகளின் எதிர்காலம் குறித்து, ஜோஹோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறிய தாவது:
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை செயற்கை நுண்ணறிவு சார்ந்த சுழற்சி மாற்றத்தை மட்டுமின்றி; ஆழமான கட்டமைப்பு நெருக்கடியையும் எதிர்கொள்கிறது. மேலும், ஆட்டோமேஷன் அதிகரித்து வருவதால், அடிப்படை கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இது தொழில்துறையின் நீண்டகால எதிர்காலத்திற்கு முக்கியமானதாகும்.
தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் உள்ள திறமையின்மைகள், உலகளாவிய மென்பொருள் தொழிற்துறையை நீண்டகாலமாக பாதித்துள்ளன.
மென்பொருள் மற்றும் சேவைகளின் முக்கிய ஏற்றுமதியாளரான இந்தியா, துருதிருஷ்டவசமாக இந்த திறமையின்மைகளுக்கு ஏற்ப மாறிவிட்டதுடன், அதை நம்பியும் உள்ளது.
இவ்வாறு கூறினார்.

