/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பொது
/
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் ரூ.12,000 கோடியில் அதானி வசமாகிறது அதானி வசமாகும் ஜெய்., அசோசியேட்ஸ் 12,000 கோடி ரூபாயில் கைமாறுகிறது

ADDED : நவ 19, 2025 11:48 PM
புதுடில்லி:கடன் சுமையில் சிக்கியுள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை, அதானி குழுமம் தன்வசப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடிப்படை கட்டுமான வசதி நிறுவனமான ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், 57,185 கோடி ரூபாய் அளவுக்கு கடன் சுமையில் சிக்கி, திவால் நடவடிக்கைக்கு சென்றது. அந்நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டன.
அதானி குழுமம், தற்போது 13,500 கோடிக்கு வாங்க முன்வந்துள்ளது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் உடனடியாக 6,005 கோடி ரூபாய் செலுத்தப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6,726 கோடி ரூபாயை செலுத்தும்.
இதற்கான வாக்கெடுப்பில், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்திற்கு கடன் அளித்தோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்வசம், ஜெய்பிரகாஷ் நிறுவன கடன் அளித்தோரின் 86% ஓட்டுகள் உள்ளன. மொத்த ஓட்டுகள் 3 சதவீதம் மட்டுமே கொண்ட, ஐ.சி.ஐ.சி.ஐ., பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஏற்கனவே வேதாந்தா நிறுவனமும் கையகப்படுத்தலுக்கு விருப்பம் தெரிவித்திருந்தது. மொத்தம் 16,000 கோடி ரூபாயை கொடுக்கவும் முன்வந்தது. ஆனால், உடனடியாக 3,770 கோடியையும் 5 ஆண்டுகளில் மீத தொகையும் தருவதாக கூறியிருந்தது. பாதி தொகையை உடனே கொடுக்க முன்வந்த அதானி, இப்போட்டியில் வென்றது.