ADDED : பிப் 01, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்துக்கான மொத்த ஜி.எஸ்.டி., வசூல், முந்தைய ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், 10.40 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.72 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், மாதாந்திர ஜி.எஸ்.டி., வசூல், 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்வது இது மூன்றாவது முறையாகும். மேலும் ஜனவரி மாத வசூல், இரண்டாவது அதிகப்பட்ச ஜி.எஸ்.டி., வசூலாகவும் உள்ளது.