ஜப்பான் 'முராட்டா எலக்ட்ரானிக்ஸ்' செங்கல்பட்டில் புதிய ஆலை
ஜப்பான் 'முராட்டா எலக்ட்ரானிக்ஸ்' செங்கல்பட்டில் புதிய ஆலை
ADDED : ஆக 09, 2025 12:51 AM

சென்னை:ஜப்பான் நாட்டை சேர்ந்த, 'முராட்டா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம், மின் சாதனங்களில் பயன்படுத்தும், 'மல்டிலேயர் செராமிக் கெபாசிட்டர்'கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 'ஆப்பிள், சாம்சங், சோனி' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு வினியோகஸ்தராக உள்ளது.
இந்நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் ஆலையை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, 'ஒன்ஹப்' சென்னை தொழில் பூங்காவில் அமைத்துள்ளது. இதன் கட்டுமான பணி இந்தாண்டு பிப்ரவரியில் துவங்கியது. இந்த ஆலையை, தொழில் துறை அமைச்சர் ராஜா நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, ராஜா கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொழில் நிறுவனமும், அரசின் பங்குதாரராக கருதப்படுகிறது.
முராட்டா நிறுவனத்தின் முதலீடு, தமிழகம் மீதான ஜப்பானிய நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். ஜப்பான் நாட்டின் நிறுவனங்கள் உண்மையிலேயே தமிழகத்தை தங்கள் இரண்டாவது வீடாக மாற்றியுள்ளன' என, தெரிவித்தார்.