நகை, ரத்தின கற்கள் வர்த்தகம் அக்டோபரில் கணிசமாக சரிவு
நகை, ரத்தின கற்கள் வர்த்தகம் அக்டோபரில் கணிசமாக சரிவு
ADDED : நவ 16, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்த மாதம் நாட்டின் நகை மற்றும் ரத்தினக் கற்கள் வர்த்தகம் கணிசமாக குறைந்துள்ளதாக, தொழில்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் தேவை குறைவு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடன் வட்டி விகிதங்கள் உயர்வு, வினியோக தொடர் சிக்கல்கள் மற்றும் அமெரிக்க வரி விதிப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணம் என, நகை மற்றும் ரத்தின கற்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஆய்வக வைரத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதால், இயற்கை வைரங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

