ADDED : ஜூலை 20, 2025 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், ஜெர்மனியை சேர்ந்த அலையன்ஸ் குழுமத்துடன் கூட்டு சேர்ந்து இணைந்து, 50: 50 என்ற விகிதத்தில் புதிய கூட்டு நிறுவனத்தை துவங்கி உள்ளது.
இந்தியாவில் பொது மற்றும் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் இறங்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன. கூட்டு நிறுவனம், சட்டரீதியான, காப்பீடு வர்த்தக கட்டுப்பாட்டாளர் ஒப்புதலுக்கு பின்னர் செயல்பாட்டை துவங்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் 25 ஆண்டுக்கு மேல் காப்பீடு துறையில் இயங்கிய அலையன்ஸ் ஆர்.இ., நிறுவனத்தின் முந்தைய வணிக அனுபவத்தை பயன்படுத்தி கொள்ள இருப்பதாக ஜியோ -பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.