ADDED : அக் 30, 2024 12:15 AM

புதுடில்லி:ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 'ஜியோ பைனான்சியல் சர்வீசஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஜியோ பேமென்ட் சொலுஷன்ஸ்', 'பேமென்ட் அக்ரகேட்டர்' என்ற வகையில், ஆன்லைன் பேமென்ட் சேவை அளிப்பதற்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்புதலால், மின்னணு பணப்பரிவர்த்தனை சேவையை, ஜியோ பேமென்ட் சொலுஷன்ஸ் நிறுவனம் வழங்க துவங்கியுள்ளது. ஏற்கனவே, மின்னணு பணப்பரிவர்த்தனை சேவையில் உள்ள 'பே பால், அமேசான் பே, போன் பே' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஜியோவின் ஜியோ பே, வருகை கடும் வர்த்தக போட்டியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்நிறுவனம், மின்னணு முறையில், கைரேகைப் பதிவு வாயிலாக சேமிப்புக் கணக்கு சேவையை வழங்கி வருவதுடன், அந்த கணக்குக்கு டெபிட் கார்டும் வழங்குகிறது. அதோடு, மின்னணு பணப்பரிவர்த்தனை சேவையிலும் ஜியோ கால் பதிக்கவுள்ளது.