sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காகவே தனித்துவமான ரூபி மற்றும் போல்கி நெக்லஸ் வடிவமைத்த ஜோஸ் ஆலுக்காஸ்

/

கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காகவே தனித்துவமான ரூபி மற்றும் போல்கி நெக்லஸ் வடிவமைத்த ஜோஸ் ஆலுக்காஸ்

கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காகவே தனித்துவமான ரூபி மற்றும் போல்கி நெக்லஸ் வடிவமைத்த ஜோஸ் ஆலுக்காஸ்

கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காகவே தனித்துவமான ரூபி மற்றும் போல்கி நெக்லஸ் வடிவமைத்த ஜோஸ் ஆலுக்காஸ்


UPDATED : பிப் 26, 2025 03:29 PM

ADDED : பிப் 26, 2025 09:30 AM

Google News

UPDATED : பிப் 26, 2025 03:29 PM ADDED : பிப் 26, 2025 09:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருமணத்தின்போது மணமகள் அணியும் நகைகள் வெறும் அணிகலன்கள் அல்ல நமது பாரம்பரியம், கலைநயம், ஆழ்ந்த உணர்வுகள் ஆகியவற்றை அந்த நகையில் பதித்த ஒவ்வொரு கல்லும் பிரதிபலிக்கின்றன. உன்னதமான நகைகளுக்குப் பெயர் பெற்ற ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காக, அபூர்வமான ரூபி மற்றும் போல்கி வைர நெக்லஸ் ஒன்றை உருவாக்கியது. காலத்தை விஞ்சிய நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், கலைநயம் மிக்க பெட்டகமாக விளங்கும் அந்த நெக்லஸ் நமது பாரம்பரியத்தைப் பெருமையுடன் பறைசாற்றுகிறது.

கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட கால காதலரான தொழிலதிபர் ஆண்டனி தட்டில்-ஐ கடந்த டிசம்பர் 12ம் தேதி, கோவாவின் அழகிய கடற்கரையில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் நேரில் வந்திருந்து வாழ்த்த, காதலும் மகிழ்ச்சியும் நிறைந்ததாய், அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணமாக, ஒரு பிரமிப்பூட்டும் நிகழ்வாக அந்தத் திருமண நிகழ்ச்சி அமைந்தது. இந்த மறக்கமுடியாத நாளன்று, கீர்த்தி, பாரம்பரியம் மற்றும் உன்னதமான கலைநயம் இவற்றின் மேல் தனக்குள்ள ஈடுபாட்டை பிரதிபலிக்கும் விதமாக ஜோஸ் ஆலுக்காஸின் கைவண்ணத்தில் உருவான ஒரு அழகு மிளிரும் நெக்லஸை அணிந்திருந்தார்.

அரச பரம்பரை நகைகளின் கலைநயத்தால் ஈர்க்கப்பட்டு அழகாய்ப் படைக்கப்பட்ட நெக்லஸ்


இந்திய அரச பரம்பரையினரின் பாரம்பரிய நகைகளின் நுணுக்கமான கலைநயத்தால் ஊக்குவிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஒரு கலைப்பெட்டகம் என்றே இதைக் கூறலாம். ராஜஸ்தானின் ஒளிரும் மணலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆழமான சிவப்பு நிற ரூபிகள், அன்கட் போல்கி மற்றும் ஜொலிக்கும் வைரங்கள் இவையனைத்தும் சேர்த்து இந்த நெக்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அரண்மனைகளின் பிரம்மாண்ட சரவிளக்குகள்போல் நுணுக்கமான வடிவத்தில், சீரான அமைப்புடன், ஈடுஇணையற்ற கம்பீரத்தையும் பாரம்பரியத்தையும், ஒருங்கே பறைசாற்றுகிறது இந்த நெக்லஸ். கவனமாக பதிக்கப்பட்ட ஒவ்வொரு கல்லும், அந்த நகைக்கு அழகை மட்டுமல்ல, எழிலார்ந்த கம்பீரத்தையும், ஒரு தனித்துவமான பாரம்பரியத்தையும் சேர்க்கின்றது. இது கீர்த்தியின் தனித்துவமான ஸ்டைல் மற்றும் அவரது திருமண நாளின் சிறப்பினை பிரதிபலிக்கிறது.

கீர்த்தி இந்த பிரமிப்பூட்டும் நெக்லஸ்க்கு மேலும் சிறப்பூட்டும் வகையில், தனது பாசத்தையும் ஆழமான உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக, 30 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் அவரது திருமணத்தின்போது அணிந்திருந்த சிவப்பு வண்ண பனாரஸ் சேலையை அணிந்து கொண்டார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிதா டொங்க்ரே இந்த பாரம்பரிய சேலையை புதுப்பித்து, மெருகூட்டியிருந்தார். இந்தச் சேலையில் ஜொலித்த வெள்ளிப் பூக்களும், ஜரிகை வேலைப்பாடுகளும் அவர் அணிந்திருந்த நெக்லஸுடன் கம்பீரமாய் ஜோடி சேர்ந்து மேலும் ஜொலித்தன. அதனுடன் பொருந்தமான காதணிகள், அழகான, தனித்துவமான நெத்திச்சுட்டி மற்றும் எழில் கொஞ்சும் வளையல்களையும் அணிந்து அவர் அன்று ஜொலித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு அணிகலனும் அவரின் அழகிற்கு அழகு சேர்த்தன, மேலும் மெருகூட்டின.

கீர்த்தி, அவரது அம்மாவின் திருமணச் சேலையை தன் திருமணத்தன்று அணிந்தது, அவர்களுக்கிடையேயான பாசத்தையும், உணர்வுபூர்வமான அன்னியோன்னியத்தையும் வெளிப்படுத்துகிறது. அத்துடன் தலைமுறைகள் தாண்டி போற்றப்பட்டு வரும் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஜோஸ் ஆலுக்காஸின் மேலாண்மை இயக்குநர் திரு. ஜான் ஆலுக்காஸ், 'எங்களது பிராண்ட் தூதுவரான கீர்த்தி சுரேஷ்க்காக இந்த அற்புதமான நகையை வடிவமைத்தது எங்களுக்கு வெறும் ஒரு கலைப்பயணம் மட்டுமல்ல, ஒரு நெகிழ்வான, உணர்வுகள் நிறைந்த, மனநிறைவான பயணமாகவும் அமைந்தது. பல வருடங்களாக அவரை நன்கு அறிவோம் என்பதால் ஜோஸ் ஆலுக்காஸில் அனைவருக்குமே இது மகிழ்ச்சி நிறைந்த தருணமாக, கொண்டாட்டமாக இருந்தது. இது வெறும் நகை மட்டும் அல்ல - கலை, தனித்துவம் மற்றும் நாங்கள் அவருடன் பகிர்ந்து கொள்ளும் உறவு ஆகியவற்றின் அடையாளமாகும் இது' என்று கூறினார்.

மணமகளுக்கென்றே தனித்துவமான பிரைடல் ஜுவல்லரி கலெக்ஷன்கள்


பாரம்பரியம் மற்றும் கைத்திறன் இணைந்து படைக்கப்படும் இந்த படைப்புகளைக் கொண்டாடும் விதமாக, ஜோஸ் ஆலுக்காஸ் மணமகளுக்கென்றே தனித்துவமான ஒரு நகை கலெக்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளனர். பாரம்பரியத்தையும் தனிப்பட்ட தன்மையையும் ஒருங்கே வெளிப்படுத்தும் இந்த கலெக்ஷன், மணமகள் தனக்கே உரிய தனித்தன்மையை, உணர்வுபூர்வமான சிறப்புத் தருணங்களை பிரதிபலிப்பது போன்ற நகைகளைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. காலத்தை வென்று நிற்கும் போல்கி நகைகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட டெம்பிள் ஜுவல்லரி அல்லது அதிநவீன வைர நகைகள் என்று இந்த கலெக்ஷனில் உள்ள அனைத்துமே, தனித்துவம், நேர்த்தி மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் மேல் தீராக்காதல் கொண்டவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரத்யேக மணமகள் நகை கலெக்ஷன், தென்னிந்தியாவெங்கும் உள்ள அனைத்து ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம்களிலும் கிடைக்கும். இந்த கலெக்ஷன் மணமகள்கள் தங்கள் திருமணத்திற்கு, காலத்தை வென்று நிற்கும் நவீன நகைகளைப் பிரதிபலித்து, பாரம்பரியத்தை இணைத்து, நுணுக்கமான வேலைப்பாட்டுடன், தங்களுக்கே உரிய அழகிய நகைகளை வடிவமைத்துக்கொள்ள வரவேற்கிறது.

மீடியா தொடர்புக்கு:

சேது ராஜ் கடைக்கல்: 9746486617

தேவு விஜயா: 9544023581

மேலும் தொடர்புக்கு: www.josalukkasonline.com








      Dinamalar
      Follow us