ஜே.எஸ்.டபுள்யு., பெயின்ட்ஸ் வசமானது 'அக்சோ நோபல்'
ஜே.எஸ்.டபுள்யு., பெயின்ட்ஸ் வசமானது 'அக்சோ நோபல்'
ADDED : டிச 12, 2025 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அலங்கார பெயின்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் 'அக்சோ நோபல் இந்தியா' நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை, 'ஜே.எஸ்.டபுள்யு பெயின்ட்ஸ்' கைப்பற்றிஉள்ளது.
ஏற்கனவே நிறுவனத்தின் 0.44 சதவீத பங்குகளை வாங்கியிருந்த நிலையில், தற்போது 60.70 பங்குகளை வாங்கிய அக்சோ நோபல் இந்தியாவில் தன் பங்கை 61.20 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
கிட்டத்தட்ட 9,403 கோடி ரூபாய்க்கு இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கையகப்படுத்தலை தொடர்ந்து, நாட்டின் அலங்கார பெயின்ட் சந்தையில் ஜே.எஸ்.டபுள்யு பெயின்ட்ஸ் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அக்சோ நோபல் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது.

