ரூ.30,000 கோடி சொத்தில் பங்கு கரிஷ்மா கபூர் வாரிசுகள் வழக்கு
ரூ.30,000 கோடி சொத்தில் பங்கு கரிஷ்மா கபூர் வாரிசுகள் வழக்கு
ADDED : செப் 10, 2025 12:03 AM

புதுடில்லி:பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் வாரிசுகள் தங்களது தந்தை, மறைந்த சஞ்சய் கபூரின் 30,000 கோடி ரூபாய் எஸ்டேட்டுக்கு உரிமை கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
சஞ்சய் கபூரின் மூன்றாவது மனைவி பிரியா, சஞ்சையின் சொத்துக்களை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் அவரது உயிலை போலியாக தயாரித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
சோனா காம்ஸ்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சஞ்சய் கபூரின் இரண்டாவது மனைவி கரிஷ்மா கபூர். இவர்களுக்கு மகன் கியான், மகள் சமைரா என இரண்டு வாரிசுகள் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் இறந்த சஞ்சய் கபூர் - பிரியா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கியானும், சமைராவும் தங்களது தந்தையின் சொத்துகளில் பங்கு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சஞ்சய் கபூரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் உயில் சட்டப்பூர்வமான, செல்லுபடியாகும் ஆவணம் அல்ல என்றும்; உண்மையான உயில் இதுவரை தங்களுக்கு காட்டப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.