ADDED : பிப் 14, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் குழுமத்தின் ஓர் அங்கமான கே.சி.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியும், இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், 'எர்நெட்' எனப்படும் கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பு இந்தியாவும் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
முக்கிய தொழில்நுட்பப் பிரிவுகளில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் மேம்பாடு செயல்பாடுகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வளர்ப்பதே, இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இதற்காக, கே.சி.ஜி., கல்வி டெக் வளாகத்தில் நடைபெற்றது.இந்த ஒப்பந்தம் வாயிலாக, வலையமைப்பாக்கல், ஐ.ஓ.டி., குவாண்டம் தகவல் தொடர்பு, இணைய பாதுகாப்பு, ஏ.ஐ., இயந்திர கற்றல் மற்றும் ஒளியியல் தகவல் தொடர்பு ஆராய்ச்சியில் சிறப்பு கவனம்செலுத்தப்படும்.

