ADDED : மே 24, 2025 12:44 AM

திருப்பூர்:'நிட்ஜோன் டிரேடு எக்ஸ்போ' நிறுவனம் சார்பில், திருப்பூர் வேலன் ஹோட்டல் கண்காட்சி அரங்கத்தில், 'நிட்ஜோன்' கண்காட்சி - 2025' நேற்று துவங்கியது. ஜவுளி மற்றும் பின்னலாடை உற்பத்தியை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி குறித்து தொழில் அமைப்பினர் கூறியதாவது:
உலக அளவில் தயாரிக்கப்படும் நவீன இயந்திரங்களை, திருப்பூரில் அறிமுகம் செய்யும் வகையில், இத்தகைய கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்த வேண்டும்.
தற்போது, 40,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ள ஏற்றுமதி வர்த்தகத்தை, ஒரு லட்சம் கோடியாக உயர்த்த நவீன இயந்திரங்கள் திருப்பூருக்கு தேவை. புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய, 'டப்' திட்டத்தை மீண்டும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
'நிட்ஜோன்' கண்காட்சி, வளர்ச்சிக்கு வழிகாட்டும் நிகழ்வாக கருதுகிறோம். வரும், 26ம் தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.