உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 29, 2026 10:59 PM
ADDED : அக் 29, 2026 10:55 PM
அ நிறம் | அளவு
காப்பீட்டு முகவர் விற்பனை செய்த பாலிசிகளில், எத்தனை பாலிசிகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன என்பதை காட்டும் விகிதமே 'பெர்சிஸ்டென்சி ரேஷியோ'.
பாலிசி தொடங்கிய முதல் ஆண்டு முடிந்து, இரண்டாவது ஆண்டிலும் அது தொடர்கிறதா என்பதை அறிய 13வது மாத தொடர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக, விற்பனை செய்த 100 பாலிசிகளில், 13வது மாதத்திலும் 80 பாலிசிகள் நடைமுறையில் இருந்தால், தொடர்ச்சி விகிதம் 80 சதவீதம்.
இந்த விகிதத்தை உயர்த்த, முகவர்கள் பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியை வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டி, பாலிசி தொடர உதவ வேண்டும்.
