UPDATED : அக் 29, 2026 10:51 PM
ADDED : அக் 29, 2026 10:48 PM
மத்திய அரசின் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2026-ம் ஆண்டு காரீப் பருவத்திற்கான ‘என் பாலிசி என் கையில்’ விழிப்புணர்வு பிரசாரத்தில், எஸ்.பி.ஐ., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இதன் வாயிலாக, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று பயிர் காப்பீட்டுக்கான ஆவணங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.
இந்த பாலிசி வினியோகம், தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மகாராஷ்டிரா, அசாம், ஒடிஷா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 9 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்காக, சிறப்பு பாலிசி வினியோக முகாம்கள் நடத்தப்பட உள்ளன. விவசாயிகளிடம் பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் சந்தேகங்களும் இந்த முகாம்களில் தீர்த்துவைக்கப்படும் என எஸ்.பி.ஐ., ஜெனரல் இன்சூரன்ஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
