ADDED : மே 10, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:'கோட்டக் மஹிந்திரா' வங்கி, அதன் டெபிட் கார்டு பயனர்களுக்கு வழங்கி வரும் சுய விபத்து காப்பீடு, உடைமைகளுக்கான காப்பீடு உள்ளிட்ட சேவைகளை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
வரும் ஜூலை மாதம் 20ம் தேதிக்கு பின், இந்த சேவைகளை பயன்படுத்த முடியாது என்று பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. 15 லட்சம் ரூபாய் வரை சுய விபத்து காப்பீடு; 5 லட்சம் ரூபாய் வரை விமான விபத்து காப்பீடு; 1.50 லட்சம் ரூபாய் வரை பொருட்களுக்கான பாதுகாப்பு; 1 லட்சம் ரூபாய் வரை உடைமைகளுக்கான காப்பீடு உள்ளிட்ட சேவைகளை கோட்டக் மஹிந்திரா வங்கி வழங்கி வருகிறது.