கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய எல்.,அண்டு டி., திட்டம்
கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய எல்.,அண்டு டி., திட்டம்
ADDED : ஜூலை 16, 2025 11:50 PM

சென்னை:சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தை 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்த, எல் அண்டு டி., நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
கடந்த 2009ல், இந்நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.
இங்கு ஆண்டுக்கு 50,000 டன் எடை கொண்ட மாடூலர் பேப்ரிகேசன் வசதிக்கும், 25 கப்பல்களை கட்டுவதற்கும், 60 கப்பல்களை பழுதுநீக்குவதற்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது உள்ள கட்டமைப்பு வசதிகளை கொண்டு நிறுவனத்தால் இந்த இலக்கை எட்ட இயலவில்லை.
எனவே, தற்போது, இங்குள்ள நிறுவனத்துக்கு சொந்தமான 892.11 ஏக்கரில், கூடுதல் அலுவலகம், கிடங்குகள், திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான மேம்பாட்டு பணிக்காக 1,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
இதற்கான பணிகளை வரும் அக்டோபரில் துவங்கி 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளது.