நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்: பாதிக்கும் திட்டங்கள் ரூ.40,000 கோடியில் 42 திட்டங்கள் பாதிப்பு
நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்: பாதிக்கும் திட்டங்கள் ரூ.40,000 கோடியில் 42 திட்டங்கள் பாதிப்பு
ADDED : டிச 10, 2024 07:28 AM

புதுடில்லி: நிலம் கையகப்படுத்துவதில் நிலவும் சிக்கலால், 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான 42 சாலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியாமல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திணறி வருகிறது.
நாடு முழுதும் பல்வேறு முக்கிய சாலைத் திட்டங்களுக்கான அனுமதிக் கடிதம் ஓராண்டுக்கு முன்பே வழங்கப்பட்ட நிலையிலும், அவற்றுக்கு தேவையான நிலத்தைப் பெறுவதில் நீடிக்கும் சிக்கலால், பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக துவங்க இயலாமல் இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ஒப்பந்ததாரர்களின் லாபம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 42 திட்டங்களில் பலவும், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்தவை என தெரிய வந்துள்ளது.
அடுத்த நிதியாண்டில் முடிய வேண்டிய பல திட்டங்கள், துவங்கப்படாமல் உள்ளதால், பெரும் காலதாமதம் ஏற்பட்டு, திட்ட மதிப்பீடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கெடுவுக்குள் பணியை முடிக்க இயலாத சூழலால், நாட்டின் சாலை கட்டுமானப் பணிகள் 10 சதவீத பாதிப்பை சந்திக்கும் எனத் தெரிகிறது.

