ADDED : ஏப் 27, 2025 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'லீப் மோட்டார்' என்ற மின்சார கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக 'ஸ்டெலாண்டிஸ்' குழுமம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சீனாவைச் சேர்ந்த 'லீப் மோட்டார்' நிறுவனத்தில் கடந்த 2023ல், ஸ்டெலாண்டிஸ் குழுமம், 14,558 கோடி ரூபாய் முதலீடு செய்து, 20 சதவீத பங்கை கையகப்படுத்தியது.
படிப்படியாக இந்த பங்கை 51 சதவீதமாக அதிகரித்த இந்நிறுவனம், லீப் மோட்டார் நிர்வாகத்தை தன்வசப்படுத்தியது. அந்நிறுவனம் இந்தியாவில் முதற்கட்டமாக 'சி10', 'டி03' ஆகிய இரு மின்சார கார்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுதும் உள்ள 'ஜீப்' மற்றும் 'சிட்ரான்' விற்பனை மையங்களின் வாயிலாக, இந்நிறுவன மின்சார கார்கள் விற்பனைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.