அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கு எல்.ஐ.சி., நிறுவனம் பதிலடி
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கு எல்.ஐ.சி., நிறுவனம் பதிலடி
ADDED : ஏப் 04, 2025 11:28 PM

புதுடில்லி:எல்.ஐ.சி.,க்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை தெரிவித்துள்ள கருத்தை, எல்.ஐ.சி., மறுத்துள்ளது.
இதுகுறித்து எல்.ஐ.சி., தலைமை செயல் அதிகாரி சித்தார்த்த மொஹந்தி தெரிவித்திருப்பதாவது:
அமெரிக்க வர்த்த பிரதிநிதிகள் சபை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'காப்பீட்டு துறையில் இந்தியா சமமற்ற களத்தை பராமரித்து வருவதாகவும், எல்.ஐ.சி.,க்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி., மற்ற காப்பீட்டு நிறுவனங்களைப் போலவே நடத்தப்படுகிறது. அரசிடமிருந்தோ அல்லது ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்தோ எந்தவொரு சலுகையையும் எல்.ஐ.சி., பெறவில்லை.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் எல்.ஐ.சி.,யின் செயல்பாடுகள் குறித்து முழுமையான புரிதல் இல்லாமல், அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நிதி சேர்க்கை மற்றும் பாலிசிதாரர் பாதுகாப்பில் நிறுவனத்தின் பங்களிப்பிற்கு, பாராட்டப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.
அரசிடமிருந்தோ அல்லது ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்தோ எந்தவொரு சலுகையையும் எல்.ஐ.சி., பெறவில்லை

