செப்டம்பர் மாத கார்கள் வி।ற்பனை 'ஓவர்டேக்' செய்தது மஹிந்திரா
செப்டம்பர் மாத கார்கள் வி।ற்பனை 'ஓவர்டேக்' செய்தது மஹிந்திரா
ADDED : அக் 01, 2024 11:06 PM

சென்னை:செப்டம்பர் மாத வாகன விற்பனை, வெறும் 0.46 சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 3.38 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், இந்த செப்டம்பரில் 3.39 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மாருதி, ஹூண்டாய், டாடா ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்களின் விற்பனையும் சராசரியாக, 5.10 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக, டாடாவை பின்னுக்கு தள்ளி, மஹிந்திரா நிறுவனம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக, 23.73 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, மஹிந்திரா நிறுவனம்.
இதற்கடுத்து, டொயோட்டா மற்றும் கியா நிறுவனங்கள், தங்கள் விற்பனையை அதிகரித்துள்ளன.
கடந்த இரு மாதங்களாக கார் விற்பனை, தொடர் சரிவுகளை சந்தித்து வந்த நிலையில், வரும் பண்டிகை நாட்களால், அக்டோபர் மாதம் முதல் நல்ல முன்னேற்றம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.