ADDED : ஜன 22, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனைத்து இணை ஆணையர்களும், தங்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வணிகர்கள், குறிப்பிட்ட தேதிக்குள் ஜி.எஸ்.டி., தாக்கல் செய்வதை உறுதி செய்ய வேண்டும். ஐ.டி.சி., எனப்படும் உள்ளீட்டு வரி வரவு மனுக்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து, தவறுகள் ஏதும் நடக்காமல் கண்காணிக்க வேண்டும்.
சரக்கு போக்குவரத்து வாகனங்களை சோதனை செய்து, 'இவே பில்' உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு துறைகள் ஜி.எஸ்.டி.ஆர்., - 7 படிவங்கள் தாக்கல் செய்வதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, அரசுக்கு வரி வருவாய் ஈட்டித் தர ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
மூர்த்தி, தமிழக அமைச்சர்
வணிக வரி, பத்திரப் பதிவு துறை