ஃபோர்ட்டிஸ் 26 சதவிகிதம் பங்குகள் வாங்க மலேஷிய நிறுவனத்துக்கு அனுமதி
ஃபோர்ட்டிஸ் 26 சதவிகிதம் பங்குகள் வாங்க மலேஷிய நிறுவனத்துக்கு அனுமதி
ADDED : அக் 05, 2025 12:07 AM

மும்பை:போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் 26.10 சதவீத பங்குகளை வாங்குவதற்கு செபியின் ஒப்புதலை பெற்றிருப்பதாக மலேஷியாவை சேர்ந்த ஐ.எச்.எச்., ஹெல்த்கேர் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ல் ஐ.எச்.எச்., ஹெல்த்கேர் நிறுவனம், போர்ட்டிஸ் ஹெல்த்கேரின் 31.10 சதவீத பங்குகளை, 4,000 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி இருந்தது. 2019ல் கூடுதலாக 26.10 சதவீத பங்குகளை, 3,300 கோடி ரூபாய்க்கு வாங்க ஐ.எச். எச்., நிறுவனம் முன்வந்தது.
ஆனால், போர்ட்டிஸ் முன்னாள் பங்குதாரர்களான மால்விந்தர், ஷிவிந்தர் சிங் மற்றும் டைச்சி சாங்கியோ இடையேயான 3,500 கோடி ரூபாய்க்கான வழக்கை காரணம் காட்டி, 26.10 சதவீத பங்குகளை விற்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பின், அக்.1ம் தேதி போர்ட்டிஸ் பங்குகளை வாங்க செபி ஒப்புதல் அளித்துள்ளதாக ஐ.எச்.எச்., நிறுவனம் தெரிவித்துள்ளது.