ADDED : ஜூலை 30, 2026 06:42 AM

சென்னை: கடந்தாண்டில் 4 லட்சம் டன் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 2 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட 2 லட்சம் டன் குறைவாகும் என கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழக்கூழ் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலர் மாதவன் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் டன் மாம்பழங்கள் பழக்கூழ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. கடந்தாண்டு 8 லட்சம் டன் மாம்பழங்கள் அரைக்கப்பட்டு, 4 லட்சம் டன் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யப்பட்டது. மேற்காசிய போரின் தாக்கத்தால் அரபு நாடுகளுக்கு மாம்பழக்கூழ் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 2 லட்சம் டன் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது.
அதனால், இந்தாண்டு சற்று தாமதமாகவே மாம்பழக்கூழ் அரைக்கும் பணிகள் தொடங்கின. கடந்த ஜூன் மற்றும் நடப்பு ஜூலையில் 3 முதல் 4 லட்சம் டன் மாம்பழங்கள் அரைக்கப்பட்டு 1.5 லட்சம் டன் முதல் 2 லட்சம் டன் வரை மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
மாம்பழக்கூழ் உற்பத்தி (லட்சம் டன்னில்) ஆண்டு மாம்பழங்கள் பழக்கூழ் 2025 8 4 2026 4 2
